2016 இல், பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த, யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் நினைவு தினம்     

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில், 2016ஆம் ஆண்டு, பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

ந.கஜன் மற்றும் ப.சுலக்சன் ஆகியோரின் மூன்றாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

நினைவேந்தல் நிகழ்வில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு, உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களின் திருவுருவப் படங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!