கவிஞர் வேலணையூர் பொன்னண்ணாவின் நினைவேந்தல் நிகழ்வு

கவிஞர் வேலணையூர் பொன்னண்ணாவின் நினைவேந்தலும், கௌரவிப்பும், பரிசில் வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.

கவிஞர் வேலணையூர் பொன்னண்ணாவின் நினைவேந்தலும், கௌரவிப்பும் பரிசில் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் இலங்கைவேந்தன் கலைக்கல்லூரியில் தென்மராட்சி வலய சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் வே.கமலேஸ்வரன் தலைமையில், டென்மார்க் பொன்மணி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைநாள் துணைவேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கன் கலந்துகொண்டிருந்தார்.

அத்தோடு, சிறப்பு விருந்தினர்களாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் இரா.சிவச்சந்திரன், தீவகம் கல்வி வலய பணிப்பாளர் பொ.ரவிச்சந்திரன், யாழ்.வணிகர் கழக உப தலைவரும், வடக்கு மாகாணசபையின் முன்னைநாள் உறுப்பினருமான இ.ஜெயசேகரன் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக டான் தொலைக்காட்சிக்குழுமத்தின் தலைவர் எஸ்.எஸ்.குகநாதன், ஓய்வுநிலை கிராமசேவகர் ச.கனகலிங்கம் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

கவிஞர் வேலணையூர் பொன்னண்ணாவின் நினைவேந்தல் நிகழ்வின் நினைவுப் பேருரையை தமிழ்நாடு சேலத்தைச் சேர்ந்த முனைவர் வே. சங்கரநாராயணன் ஆற்றினார்.

இதன்போது தீவக வலயத்தைச் சேர்ந்த 150 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், கவிஞர் வேலணையூர் பொன்னண்ணாவின் நினைவேந்தலினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்கள், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அத்தோடு கவிஞர்கள் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!