ரஷ்யாவில் அணை உடைந்ததில் 15 பேர் உயிரிழப்பு     

ரஷ்யாவில் சைபிரியா பகுதியைச் சேர்ந்த தங்கச் சுரங்கம் அருகே சீபா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை உடைந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

அணை உடைந்ததை அடுத்து குறித்த பகுதியிலிருந்த குடியிருப்புகளில் நீர் புகுந்ததால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

அனர்த்தத்தை அடுத்து குறித்த பகுதியில் தற்போது மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!