முல்லைத்தீவில் மாதிரிப்பண்ணை 

முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு சிவில் பாதுகாப்பு பிரிவினரால், தேவிபுரம் பகுதியில் மாதிரிப்பண்ணை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாதிரிப்பண்ணையை வைபவரீதியாக ஆரம்பித்துவைத்தார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் இப்பண்ணையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள 40 ஏக்கர் மரமுந்திரிதோட்டத்தினூடாக, வேலையற்றிருக்கும் முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்புகள் வழங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதனூடாக பெருமளவிலான இளைஞர் யுவதிகள் நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!