வவுனியாவில் பனி மூட்டம் 

வவுனியாவில் இன்று அதிகாலை அதிகளவான பனிமூட்டம் காணப்பட்டதால் வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்திருந்தனர்.

வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் இன்று காலை 8 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது.

இதனால் பணிக்குச் செல்வோர், வாகன சாரதிகள் என பலரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ஏ9 வீதி உட்பட வவுனியாவில் வீதியால் சென்ற வாகனங்கள் காலை 8 மணிவரை வாகனத்தின் முன்பக்க ஒளியை ஒளிரவிட்டுச் சென்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அண்மைக்காலமாக வவனியாவில் குளிருடன் கூடிய காலநிலை காணப்பட்டபோதிலும் இன்றைய நிலை போன்றதான பனி மூட்டம் காணப்படவில்லை என்று வவுனியா மக்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!