கிளி-தர்மபுரத்தில்,நெசவு தொழிற்சாலை திறந்து வைப்பு   

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் சிவில் பாதுகாப்பு பிரிவினரால் நெசவு தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு விசுவமடு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் நேற்று இடம்பெற்றது.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் 02 மில்லியன் ரூபா செலவில் நெசவுத்தொழிற்சாலை புணர்நிர்மாணம் செய்யப்பட்டு, அதற்கான உபகரணங்களும் பொருத்தப்பட்டு, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகமவினால் நெசவு தொழிற்சாலை வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட 3 ஆயிரத்து 200 முன்னாள் போராளிகளுக்கு நிரந்தரமான அரச வேலை வாய்ப்பை வழங்கும் நோக்கில் நெசவு தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தையல் தொழில், நெசவுத்தொழில், பின்னல் அலங்காரம், பன்ன வேலைகள், விவசாயம், முன்பள்ளி ஆசிரியர் போன்ற பணிகளுக்கு அமர்த்தப்பட்டு, சிவில் பாதுகாப்பு பிரிவினரால் மாதாந்த ஊழியம் வழங்கப்பட்டு வருவதாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!