நாட்டின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு   

நாட்டின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும், மழையுடனான வானிலை காரணமாக கேகாலை, இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையே இன்று மாலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை, இம்புல்பே மற்றும் ஓப்பநாயக்க பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கும் கோகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!