யாழில்,அறிவியல் தமிழ் கருத்தரங்கு 

யாழ்ப்பாணத் தமிழ் சங்கமும் தமிழ் விக்கிபீடியா குழுமமும் இணைந்து ஏற்பாடு செய்த அறிவியல் தமிழ் கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

பொறியியலாளர் விக்கிபீடியர் எம்.சிவகோசரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வை வாழ்நாள் பேராசிரியர் சண்முகதாஸ் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்த கொண்ட விருந்தினர்களும் மங்கள விளக்கேற்றி வைத்தனர்.

இந்நிகழ்வில் வரவேற்புரையை யாழ்ப்பாண தமிழ்ச் சங்க செயலாளர் இ.சர்வேஸ்வரா, வாழ்த்துரையை யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் இலக்கிய கலாநிதி ப.கோபாலகிருஸ்ண ஐயர், தொடக்கவுரையை யாழ்ப்பாண தமிழ்ச் சங்க தலைவர் ச.லலீசன், அறிமுக உரையை ஒய்வுநிலை கட்டட கலைஞர் விக்கிபீடியர் இ.மயுரநாதன் ஆகியோர் ஆற்றியிருந்தனர்.

கடந்த 2003 ஆம் அண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழ் விக்கிபீடியாவின் 16 வருடங்கள் நிறைவை முன்னிட்டே இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழ் விக்கிபீடியாவை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மயுரநாதக் இயக்கி வருகின்றார்.

நிகழ்வில் தமிழ்ச் சங்கத்தினரால் மயுரநாதன் பொன்னாடை போர்த்தி மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

இந் நிகழ்வில் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், விக்கிபீடியா குழுமத்தினர், இந்தியாவில் இருந்து வருகை தந்த விக்கிபீடியர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!