ஜனாதிபதி இன்று ஜப்பானிற்கு விஜயம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் ஜப்பானிற்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாளை மறுதினம் நடைபெறவுள்ள ஜப்பான் பேரரசர் நருஹிடோவின் முடிசூட்டு விழா நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி ஜப்பானிற்கு விஜயம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ளுமாறு பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ், சவுதியின் முடிக்குரிய இளவரசர் மொஹம்மது பின் சல்மான் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் 126 ஆவது பேரரசராக இளவரசர் நருஹிடோ முடிசூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!