ஊடகவியலாளர் நிமலராஜனின் 19 ஆம் ஆண்டு நினைவு தினம்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 19 ஆம் ஆண்டு நினைவு தினம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், வவுனியாவில் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது.

சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தாம் போராட்டம் மேற்கொள்ளும் இடத்தில், நினைவஞ்சலி நிகழ்வை நடத்தியுள்ளனர்.

இதன்போது, திருவுருவ படத்திற்கு தீபம் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை, 974 ஆவது நாளாக, தொடர்ச்சியாக போராட்டம் இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!