கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைமைக் காரியாலய திறப்பு விழா

கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைமைக் காரியாலய திறப்பு விழாவும் ஒன்றியத்தின் இணையத்தளம் ஆரம்ப நிகழ்வும் இன்று மட்டக்களப்பில்  நடைபெற்றது

கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைவர் சட்டத்தரணி தட்சணாமூர்த்தி சிவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  கிழக்குமாகாண புத்திஜீவிகள் ,கிழக்கு தமிழர் ஒன்றியத்தின், அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.

கிழக்கு தமிழர் ஒன்றியம் கிழக்கு மாகாண மக்களுக்காக சிறந்த  அரசியலை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த கிழக்கு தமிழர் ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டு அதன் தலைமை காரியாலயம் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைவர்  சட்டத்தரணி தட்சணாமூர்த்தி சிவநாதன் தெரிவித்தார்

கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைமைக் காரியாலய திறப்பு விழா மற்றும்  ஒன்றியத்தின் இணையத்தளம் ஆரம்ப நிகழ்வினை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தார்

Recommended For You

About the Author: லியோன்

error: Content is protected !!