பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்  தலைவர் பதவியில் இருந்து சர்ப்ராஸ் அகமது நீக்கம்.

இங்கிலாந்தில் கடந்த ஜூன்-ஜூலை மாதங்களில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவர் இன்ஜமாம் உல்-ஹக் விலகினார்

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டி கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ப்ராஸ் அகமது நேற்று நீக்கப்பட்டார்.

சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி நியூசிலாந்து (1-2), தென்ஆப்பிரிக்காவுக்கு (0-3) எதிரான டெஸ்ட் தொடர்களை பறிகொடுத்தது. இந்த மாதம் தொடக்கத்தில் உள்ளூரில் நடந்த முன்னணி வீரர்கள் இல்லாத இலங்கையிடம் மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. தொடர்ச்சியான தோல்வி காரணமாக 32 வயதான சர்ப்ராஸ் அகமதுவின் கேப்டன் பதவி இழந்துயிருக்கிறார்

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக அசார் அலியும், 20 ஓவர் அணியின் கேப்டனாக பாபர் அசாமும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு பயணித்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் இரண்டு டெஸ்டுகளில் விளையாடவுள்ளது . சர்ப்ராஸ் அகமது துடுப்பாட்டத்தில் தடுமாற்றத்தை கொண்டுள்ளதால் இரண்டு போட்டிக்கான அணியிலும் இடம் பெறவில்லை. அவர் டெஸ்டில் சதம் அடித்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!