அரச நிறுவனங்களில் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி துண்டுபிரசுரம் வியோகம் தடை

அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், நியதிச் சபைகள், மாகாண சபை நிறுவனங்கள், உள்ளுராட்சி மன்றங்கள் என்பனவற்றில் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து வாக்குகளை கோருவதற்கும் துண்டுபிரசுரங்களை விநியோகிப்பதது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது உரிய நிறுவன தலைவர்களின் பொறுப்பாகும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிததுள்ளார்.

மேலும் தேர்தல் தொடர்பான வழிகாட்டல்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 19ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். (சே )

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!