முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தினரால் உதவி

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் முன்னாள் போராளி குடும்பத்தினர் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கும் சக்கர நாற்காலிகள் மற்றும் கல்வி தரத்தை மேம்படுத்தும் கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நேற்று கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரியவின் வழிக்காட்டலின் கீழ் முன்னாள் போராளி அங்கத்தவர்கள், ஆசிரியர்கள், கிராம சேவை உத்தியோகத்தர் அவர்களது பங்களிப்புடன் நடைபெற்றுள்ளது

 

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கலந்து கொண்டு, பாடசாலை செல்லும் 20 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும், வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தினருக்கு உலருணவு பொருட்கள்

உள்ளடங்கிய பரிசுப் பொதிகளை வழங்கி வைத்தார்.

மேலும் முன்னாள் போராளிகள் 15 பேருக்கு வெல்டிங் ஆலைகள், கிரைண்டர் இயந்திரங்கள், மின்சார பயிற்சிகள், மற்றும் , சைக்கிள், சக்கர நாற்காலிகள், சோலார் பேனல்கள் உள்ளிட்ட வாழ்வாதார உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!