அனர்த்த  நிவாரண சேவைகள் முன்னாயத்த திட்டமிடல் தொடர்பான மீளாய்வு

பிரதேச செயலாளர்கள் மற்றும்  அனர்த்த  நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்களுக்கான  பருவபெயர்ச்சி  காலநிலையினால் பாதிக்கப்படுகின்றவர்களுக்காக நிவாரண முன்னாயத்த திட்டமிடல் தொடர்பான மீளாய்வு கலந்துரையாடலும் , விழிப்புணர்வு செயலமர்வும் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது .

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையம் மற்றும் உலக உணவு நிகழ்ச்சித்திட்டத்தின்  நாட்டின் ஏற்படுகின்ற அனர்த்தத்தினால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு நிவாரணம்., மக்களுக்கான  அனர்த்த காப்புறுதி ,அனார்த்த அபாய குறைப்பு ,காலநிலையினை எதிர்கொள்வதற்கான , முன்னாயத்த திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஆர் . சிவநாதன் ஒழுங்கமைப்பில்  மாவட்ட செயலாளர் எம் .உதயகுமார் தலைமையில் நடைபெற்ற மீளாய்வு கலந்துரையாடலும் , விழிப்புணர்வு செயலமர்வில் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திராஜா , அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் எஸ் .அமலநாதன் , மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்கள மாவட்ட உதவி பணிப்பாளர் எம் எ  சி எம் .ரியாஸ் மற்றும் பிரதேச செயலாளர்கள் , தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்

Recommended For You

About the Author: லியோன்

error: Content is protected !!