ஸ்ரீரங்காவிற்கு பிணை!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா உட்பட 6 சந்தேக நபர்களை, வவுனியா நீதவான் நீதிமன்றம், இன்று பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில், 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்தில், பொலிஸ் அதிகாரி ஒருவர் பலியான சம்பவத்தில், சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா உட்பட 6 பேரை கைது செய்வதற்கான உத்தரவை, சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்திருந்தது.

இதற்கமைய, வவுனியா நீதிமன்றத்தில் இன்று காலை சரணடைந்த சந்தேக நபர்கள், பிணை கோரிக்கையை முன்வைத்தனர்.

இதற்கமையவே சந்தேக நபர்களுக்கான பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்குடன் சம்மந்தப்பட்ட 6 பேரும், சரீர பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தேக நபர்களின் கட்வுச் சீட்டுக்களும் நீதிமன்றத்தால் முடக்கப்பட்டுள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!