கிளியில், கண்ணிவெடி அகற்ற ஜப்பான் 105 மில்லியன் நிதி!!

ஜப்பானிய தூதுவர், கிளிநொச்சி முகமாலை கண்ணிவெடி அகற்றும் பிரதேசத்தில், ஒரு வருட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.

கிளிநொச்சி முகமாலை பகுதியில், யுத்த காலங்களின் போது புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் அகற்றும் பணிகளில் ஸாப் நிறுவனமும், ஹலோ ரெஸ்ட் நிறுவனமும் இணைந்து செயற்பட்டு வருகின்றது.

இந்த இரண்டு நிறுவனங்களுக்கும், ஜப்பானிய அரசாங்கத்தின் கிராஸ்ரூட்ஸ் மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான கிராண்ட் உதவி திட்டத்தின் ஊடாக, கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்காக, ஒரு வருடத்திற்காக சுமார் 105 மில்லியன் ரூபா நிதி வழங்க, ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில், ஸாப் நிறுவனத்தினதும் ஹலோ ரெஸ்ட் நிறுவனத்தினதும் முகாமையாளர்கள் கையெழுத்திட்டு, ஜப்பானிய தூதுவரிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, ஜப்பான் தூதுவர் கண்ணிவெடி அகற்றப்படும் இடங்களுக்கு சென்று, நிலைமைகளை பார்வையிட்டார்.

ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில், யாழ் மாவட்ட படைப்பிரிவின் கட்டளைத்தளபதிகள், ஸாப் நிறுவனத்தினதும் ஹலோ ரெஸ்ட் நிறுவனத்தினதும் பணியாளர்கள் என பலர் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!