சஜித் ஆட்சியில், இரட்டை நாக்கு ஆட்சி நடக்காது : சஜித்

ஊடகவியலாளர்களின் கேள்விகளில் இருந்து தப்பிச்செல்பவர், எவ்வாறு நாட்டை ஆட்சி செய்ய முடியும்? என, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

குருநாகல் ஹிரியால பிரதேசத்தில் நேற்று நடத்தப்பட்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தவர், மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கு சூழ்நிலையை ஏற்படுத்தியவர் சரத் பொன்சேகாதான் என்பதை கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக் கொண்டுள்ளார். ஏன் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஊடக சந்திப்பின்போது போரில் ஏற்பட்ட சம்பவங்கள், பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து கேள்வி எழுப்பிய போது, குழப்பத்திற்கு உள்ளாகிய கோட்டபாய, உடனே போருக்கு தலைமை தாங்கியது தாமோ அல்லது மஹிந்த ராஜபக்சவோ இல்லை. மாறாக சரத் பொன்சேகாதான் என்று பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த சர்வதேச ஊடகவியலாளர், எமது நாட்டுப் படையினர் மீது குற்றச்சாட்டு ஒன்றை கேள்வியாக முன்வைக்கின்ற தருணத்தில் அந்தக் கேள்வியிலிருந்து தப்பிச்செல்பவர் எவ்வாறு இந்த நாட்டை ஆட்சிசெய்ய முடியும்?

என்னிடம் அப்படி கேள்வி எழுப்பியிருந்தால் இந்த நாட்டு இராணுவத்தினர், பொலிஸார் படையினரை காப்பாற்றுவதற்காக என் கழுத்து போனாலும் தைரியமாக பதிலளித்திருப்பேன்.

பலம்வாய்ந்த தலைவராக கூறிக்கொண்டாலும் எமது படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் குறித்து கேள்வி எழுப்பினால் அதற்கு முதுகெலும்பு உள்ளவராக பதிலளித்திருக்க வேண்டும்.

இராணுவத்தினரை மின்சாரக் கதிரைக்கு அரசாங்கம் கொண்டு செல்வதாகக் கூறினார்கள். ஆனால் அந்த ஊடக சந்திப்பில் இந்த நாட்டு அனைத்துப் படையினரையும் கோட்டபாய ராஜபக்ச காட்டிக்கொடுத்து விட்டார்.

இந்த நாட்டு இலட்சக்கணக்கான படையினரை சர்வதேச ஊடகங்களுக்கு முன்பாக மின்சாரக் கதிரையில் ஏற்றிவிட்டார். இதுதான் உண்மை.

ஆனாலும் சஜித் பிரேமதாஸ மக்களையோ நாட்டையோ படையினரையோ காட்டிக்கொடுக்கப் போவதில்லை.
எந்த நாட்டிற்கும் எந்த அமைப்பகளுக்கும் நான் அடிடையாக மாட்டேன்.

சர்வதேச அமைப்புக்கள், அரங்கிற்கு எமது நாடு அடிமையானது முடிந்து விட்டது. நாட்டிற்காக தேசத்திற்காக நான் எந்தவொரு அர்ப்பணிப்பையும் செய்யத் தயார். சஜித் பிரேமதாஸவின் ஆட்சியில் இரட்டைநாக்கு ஆட்சி நடக்காது’. என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!