வவுனியாவில், தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை இவ்வளவுதானா?

ஜனாதிபதி தேர்தலுக்காக, வவுனியா மாவட்டத்தில் 5 ஆயிரத்து 38 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்த நிலையில், 898 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக, வட மாகாண பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.ஜி.லலித் ஆனந்த தெரிவித்துள்ளார்.

இன்று, வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ள அலுவலகத்தில், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், வவுனியா மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 333 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அவர்களில் 5 ஆயிரத்து 38 பேர், தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்திருந்த நிலையில், உரிய வகையில் விண்ணப்பத்தை பூரணப்படுத்தாமை மற்றும் தவறான தகவல்கள் வழங்கியமை காரணமாக, 898 அரச உத்தியோகத்தர்களின் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி 4 ஆயிரத்து 140 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தபால் மூல வாக்கு எண்ணும் நடவடிக்கைகளுக்காக, 9 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட தபால் மூல வாக்குகளும், வவுனியா மாவட்ட செயலகத்திலேயே எண்ணப்படும்.

அத்துடன், தற்போது தபால் மூல வாக்குச் சீட்டுக்கள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!