இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று கிளிக்கு விஜயம்!!

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், அவரை இராணுவ மரியாதையுடன் வரவேற்கும் நிகழ்வு கிளிநொச்சி இரணைமடு இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதன்போது கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய உட்பட படை அதிகாரிகள் பலரும் பங்கேற்று, இராணுவத் தளபதியை வரவேற்றனர்.

தொடர்ந்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசம் இருந்த காணிகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ஆகியோர் குறித்த காணி விடுவிப்பு தொடர்பான ஆவணத்தில் கையொப்பமிட்டு ஆவணங்களை பெற்றுக்கொண்டனர்.

குறித்த ஆவணங்களை இராணுவத் தளபதி மற்றும் கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி ஆகியோர் அரச அதிகாரிகளிடம் கையளித்தனர்.

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த காணிகளே இவ்வாறு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுளள்ளன.

தொடர்ந்து இராணுவத் தளபதியினால், கிளிநொச்சி மாவட்டத்தில் நலிவுற்ற மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இராணுவத் தளபதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்ததை நினைவுகூரும் முகமாக, கிளிநொச்சி இரணைமடு இராணுவ தலைமையகத்தில்

மரக்கன்று ஒன்றும் இராணுவத்தளபதியினால் நாட்டி வைக்கப்பட்டது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!