இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சு சிறப்பு-லாரா

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய வேகப்பந்து வீச்சு  நம்பமுடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கிறது என  கிரிக்கெட் ஜாம்பவான் பிரயன் லாரா தெரிவித்துள்ளார்.

மும்பையில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய வேகப்பந்து வீச்சு நம்பமுடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கிறது. ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் தற்போது ஓய்வில் இருக்கும் புவனேஷ்வர்குமார் ஆகியோர் தரம் வாய்ந்த பந்துவீச்சாளராக திகழ்கிறார்கள். 1980, 90-களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பலம் வேகப்பந்து வீச்சை இந்திய பந்து வீச்சு எனக்கு மீண்டும் ஞா பகமூட்டியது என அவர் தெரிவித்தார்.

 

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் பொல்லார்ட் அனுபவம் வாய்ந்தவர். அவருக்கு சக வீரர்களின் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன். அவர் உலகம் முழுவதும் கிரிக்கெட் விளைய வீரர்  அதனால் வெற்றிகரமாக செயல்பட என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து வைத்திருப்பார்,மேற்க்கு இந்திய தீவு  கிரிக்கெட்டுக்காக அர்ப்பணிப்புடன் நீண்ட காலம் விளையாடினால், அணி சரியான பாதையில் செல்ல வழிவகுக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். சே

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!