மடூல்சீமையில் பல்கலைக்கழகம் அமைக்க​ கோரிக்கை-வடிவேல் சுரேஸ்

மடூல்சீமை பிரதேசத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைத்து தருமாறு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் ​கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மடூல்சீமை நகரில் நேற்று புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வு கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் மடூல்சீமை பகுதி மக்களின் வாக்குகளை கொள்ளை அடிக்க எதிர்கட்சிகள் முயச்சிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார் .

பெரும்பான்மை மக்களுக்கு சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் தமிழ், முஸ்லிம் மக்களை பொறுத்த வரையில் அவர் கட்டாயம் ஜனாதிபதியாக வேண்டிய தேவை இருப்பதாக அவர் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானால் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு முன்னர் நேர்ந்தவைகள் மீண்டும் தொடர் தொடர்வதை எவராலும் தடுக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் மேலும் தெரிவித்துள்ளார். (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!