நாட்டின் வறட்சி தொடர்பில் கவனம் செலுத்தப்படும் – அனுர!

ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளுக்குள், அனைத்து நீர் நிலைகளையும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்து, வர்த்தமானி வெளியிடுவேன் என, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று, சுற்றுச்சூழல் கொள்கை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட வேளை இவ்வாறு குறிப்பிட்டார்.

சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் கையெழுத்திட்ட உடன்படிக்கைகளின் விளைவாக, நாட்டின் சுற்றுச்சூழலை முன்னேற்ற எதிர்கொள்ளும் தடைகளை மதிப்பீடு செய்ய ஒரு நிபுணர் குழு அமைக்கப்படும்.

5 ஆண்டு திட்டத்தின் பிரகாரம் 500,000 ஏக்கர் பரப்பளவில் நிலப்பரப்பில் வனப்பகுதியில் மருத்துவ தாவரங்களை வளர்த்து வனப்பகுதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்தவகையில் நாட்டின் வனப்பகுதியை ஐந்து ஆண்டுகளுக்குள், 35 சத வீதமாக உயர்த்தி நாட்டினை வளப்படுத்துவதே தனது நோக்கம்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாரிய காடுகளான சிங்கராஜா, வில்பத்து உள்ளிட்ட பகுதிகள் அபாயத்திற்குள்ளாகின.

யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவை விடவும் அதிகளவான அழிவு சூழல் பாதிப்பினால் ஏற்பட்டது. அனைத்து இடங்களிலும் மணல் அகழும் நிலையங்கள் அரசியல்வாதிகளுக்கே சொந்தமாகவுள்ளது. சுரங்கங்கள் அரசியல்வாதிகளுக்கு சொந்தமானவை. எங்கேனும் காடழிக்கப்பட்டிருந்தால், அது அரசியல்வாதிகளுக்காகவே இருக்கும்.

கிராமமொன்றில் விவசாய நிலம் அல்லது காணியொன்று நிரப்பப்படுகின்றது எனின், அதன் பின்புலத்திலும் அரசியல்வாதிகளே இருப்பார்கள்.

எங்கேனும் காடழிக்கப்படுகின்றது எனின், கற்குவாரிகள் முன்னெடுக்கப்பட்டு செல்லப்படுகின்றது எனின், அதன் பின்னணியிலும் அரசியல்வாதிகளே இருப்பார்கள்.

இந்த ஆட்சியாளர்களினால் சூழலை பாதுகாப்பதற்கு மக்களின் எண்ணங்களில் மாற்றங்களைக் கொண்டுவர முடிவதில்லை. என குறிப்பிட்டுள்ளார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!