யாழில், நாமல் – புத்திஜீவிகள் சந்திப்பு!!

யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த பல் துறைசார் நிபுணர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும் இடையிலான கலந்துரையாடல், யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில், தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில், எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன் போது, கலந்துரையாடலில் பங்கேற்ற பல் துறைசார் புத்திஜீவிகள், பாராளுமனற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம், தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

இந்தக் கலந்துயைராடலில், வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பாராளுன்ற உறுப்பினர் அங்கஜன் இராமாதன், பேராசிரியர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள் என பலரும் கலந்துகொணடனர்.

இறுதியில், வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற யாழ்ப்பாண மாணவன் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!