இலங்iயின் கௌரவத்தை சர்வதேச அளவில் உறுதிப்படுத்தியது நல்லாட்சி அரசாங்கமே – மங்கள!!

நல்லாட்சி அரசின் காலத்தில், உலகின் பிற நாடுகளுடன், இலங்கை இறையாண்மை கொண்ட நாடாக மீண்டும் தனது இடத்தைப் பிடித்தது என, நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னர், இராணுவத்தினருக்கு அமைதி காக்கும் பணிகளும் பயிற்சி வாய்ப்புகளும் பறிக்கப்பட்டன.

அத்தோடு பொருளாதாரமும் சரிவடைந்து. இலங்கை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் 100 நாள் வேலைத்திட்டத்தை முன்னிறுத்தி, வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆணையின் அடிப்படையில், 2015 ஜனவரி 8 ஆம் திகதி அன்று நடந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து, இலங்கையின் இறையாண்மையை மீண்டும் பெறுவதற்கும் உறுதிப்படுத்துவதற்கும் அரசாங்கம் ஐ.நா தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியிருந்தது.

இதன் மூலம், இலங்கை அரசாங்கம் தனது சொந்த பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கான இறைமையுடன் கூடிய உரிமையை வலியுறுத்தியது.

இதன் காரணமாக சர்வதேச சமூகம் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சூழலை தடுத்தது.
இது இலங்கையில் உறுதியான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான திட்டம், தனது சொந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கான பொறுப்பை ஏற்கும் நாடு என்ற இலங்கையின் கௌரவத்தை சர்வதேச அளவில் உறுதிப்படுத்துவதற்கான திட்டம்.

ஐ.நா மனித உரிமை பேரவையில், எமது அரசாங்கத்தின் காலத்தில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின் மூலம், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் 2014 மார்ச் 25/1 நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பயன்படுத்தி சர்வதேச நடவடிக்கைகளை எடுப்பதை தடுத்து நிறுத்தினோம்.

இதன்பின்னர் 2015 ஆம் ஆண்டில், இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க நிகழ்ச்சி நிரலைக்கொண்டு, உலகின் பிற பகுதிகளுடன் ஒரு பொறுப்புள்ள இறையாண்மை கொண்ட நாடாக மீண்டும் தனது இடத்தைப் பிடித்தது’ என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!