வெங்காய வெடியில் பாதிக்கப்பட்ட யானை அட்டகாசம்!!

முல்லைத்தீவு உடையார்கட்டு இருட்டுமடுப் பகுதியில், வெங்காய வெடியில் சிக்கி பாதிக்கப்பட்ட காட்டு யானை ஒன்று, இன்று அதிகாலை மக்களின் விவசாய நிலத்திற்குள் புகுந்து, மக்களை அச்சறுத்தி வருகின்றது.

இருட்டுமடு கிராமத்திற்குள் இன்று அதிகாலை வேளை சென்ற யானை, பல இடங்களில் திரிந்துவிட்டு, பாலகுமார் என்பவரின் வீட்டு தோட்ட காணிக்குள் புகுந்துள்ளது.

வாயில் வெங்காய வெடியில் சிக்கி பாதிக்கப்பட்ட காட்டு யானை, காணிக்குள் நின்று மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக, எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

வெடி கொழுத்தி யானையை காட்டுக்குள் கலைக்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்ட போதும், பலன் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், யானையின் பாதிப்பு குறித்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும், எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என, பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!