ஓமந்தை மத்திய கல்லூரியில், பனை விதைகள் நடுகை!!

சுயாதீன இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில், ஒரு இலட்சம் பனை விதைப்புத் திட்டத்தின் கீழ், 25 ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளது.

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி மற்றும் சுயாதீன இளைஞர் அமைப்பின் ஓழுங்கமைப்பில், ஓமந்தை மத்திய கல்லூரி மைதானத்தைச் சுற்றி, இன்று 25 ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில், ஓமந்தை மத்திய கல்லூரி அதிபர் தனபாலசிங்கம் மற்றும் மாணவர்கள், வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா, கிராம சேவையாளர்கள் மற்றும் சுயாதீன இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டு, பனை விதைகளை விதைத்தனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!