மட்டக்களப்பில், மகளிருக்கான சிநேகபூர்வ உதைப்பந்தாட்ட போட்டி!!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துடன் மாவட்ட உதைப்பந்தாட்ட சமேளனம் இணைந்து மாவட்ட உதைப்பந்தாட்ட கழக மகளிர் அணிகளுக்கிடையிலான சிநேகபூர்வ உதைப்பந்தாட்ட போட்டி வெபர் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

புலம் பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு பாதுகாப்பான புலம் பெயர்தல் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் மாவட்ட செயலகத்துடன் இணைந்து புலம் பெயர்ந்தோரின் உரிமைபாதுகாப்பு, வாழ்வாதாரம், குடியேற்றத்தின் செயல்பாட்டு சவால்கள் போன்ற சமூகத்திற்கு பயனளிக்கும் செயல்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அதன் ஒரு செயல்பாடாக பாதுகாப்பான புலம் பெயர்வு விழிப்புணர்வு நிகழ்வாக அம்பாலந்துறை, முனைக்காடு , தன்னாமுனை , பன்சேனை ஆகிய மகளிர் கழக அணிகளுக்கிடையிலான சிநேகபூர்வ உதைப்பந்தாட்ட போட்டி மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் வெபர் மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அயச கருணாரட்ன, சிறப்பு அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலாளர், புலம் பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் உத்தியோகத்தர்கள், மாவட்ட உதைப்பந்தாட்ட சமேளன உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!