ஐக்கிய இடதுசாரி முன்னணி தேசிய மக்கள் சக்தி கூட்டணி அனுர குமாரக்கு ஆதரவு

நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு திட்டம் தேசிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே உள்ளது என ஐக்கிய இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார் .

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இடதுசாரி முன்னணியின் மத்திய செயற்குழுவினால் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த 71 ஆண்டு காலமாக நாட்டை ஆட்சி செய்த தரப்பினர் மாற்றி,மாற்றி நாட்டை சூறையாடிவுள்ளனர் பொதுமக்களை ஏமாற்றி நாட்டின் வளங்கள் சுரண்டப்படுவதாக மேலும் அவர் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியுடன் மேற்கொண்ட நீண்ட கலந்துரையாடலின் பின்னரே அனுர குமார திசாநாயாவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!