மடு கல்வி வலயத்திற்குற்பட்ட மாணவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடிகள்     

உலக பார்வை தினத்தையொட்டி மடு கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ‘டேவ் லிங்க்’ அமைப்பின் ஏற்பாட்டில் இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு அடம்பன் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

மடு வலயக் கல்விப்பணிமனையின் அனுசரனையில் இடம்பெற்ற குறித்த இலவச கண் பிரிசோதனை முகாமில் மடு கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 300 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது, கண் பரிசோதனைகளை மேற்கொண்ட மாணவர்களில் தேவைப்பட்ட மாணவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் ‘டேவ் லிங்க்’ அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!