வடமராட்சி கிழக்கில் சுழல் காற்று 

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் வீசிய சுழல் காற்றினால் மாமுனை வடக்கு பகுதியில் ஆலயம் ஒன்றின் அன்னதான மடம் கடுமையாக சேதமடைந்துள்ளது.

சுழல் காற்றினால் அன்னதான மடத்தின் கூரைகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் கட்டடமும் சேதமடைந்துள்ளது.

இதேவேளை ஆலயத்திற்க்கு முன்பாக இருந்த பனை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான கட்டட கூரைகள் முற்று முழுதாக தூக்கி எறியப்பட்டுள்ளன.

இதேவேளை, சம்பவ இடத்திற்கு அருகில் சுமார் 50 மீற்றர் தொலைவில் மாமுனை பாடசாலை காணப்பட்டபோதும் குறித்த பாடசாலைக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!