ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 09 நாட்களில் 762 முறைப்பாடுகள்

09 நாட்களில் 762 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது மேலும் தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 733 முறைப்பாடுகள் இதில் அடங்குவதாக தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 89 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது .

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் ட்ரான்ஸ்பெரன்சி இன்டெர்நெஷனல் நிறுவனத்திற்கு 33 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

அரச வாகனங்கள் மற்றும் கட்டிடங்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தல், நியமனங்கள், இடமாற்றங்கள் மற்றும் பதவியுயர்வுகளை பெற்றுக் கொடுத்தல், அரச அதிகாரிகளை தேர்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தல் உள்ளிட்ட முறைப்பாடுகள் அதில் உள்ளடங்குவதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!