ஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல்:உயிரிழப்பு அதிகரிப்பு   

ஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.

ஹகிபிஸ் புயல், ஜப்பானின் டோக்கியோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தாக்கி கடும் தேங்களை ஏற்படுத்தியுள்ளது.

புயல் கரையை கடந்த போதிலும் பரவலாக கனமழை பெய்து வருவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 5 இலட்சம் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.

தற்போது புயல் கரையை கடந்துவிட்டதால் மீட்புப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதுடன், மீட்பு பணிகளில் இராணுவ வீரர்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஹகிபிஸ் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளதுடன் 212 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!