வடக்கில் வீதி அபிவிருத்தித் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவி நிகழ்ச்சித்திட்டதின் கீழ், தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சால் அமுல்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைக்கப்பட்ட வீதி அபிவிருத்தித் திட்டம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிகால் சூரியாராச்சிரூபவ்,கருத்திட்ட பணிப்பாளர் ஜெனிபர், யாழ்.மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன், மேலதிக மாவட்ட செயலாளர் சு.முரளிதரன், மாகாண கருத்திட்ட பணிப்பாளர் வதனகுமார்,
வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் சிவநேசன், பிரதேச செயலாளர்கள், பிரேமினி பொன்னம்பலம், சிவசிறி ஆகியோர் கலந்து கொண்டு ஒருங்கிணைக்கப்பட்ட வீதி அபிவிருத்தித்திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!