அம்பாறையில், பாலியல் வழக்கில் கைதானவரின் பிணை மனு நிராகரிப்பு!!

வீதியால் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியை அழைத்து, பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பிணை விண்ணப்பம் மறுக்கப்பட்டு, எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு, இன்று கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சந்தேக நபரின் சட்டத்தரணிகள் அவரின் வயதினை அடிக்கடி சுட்டிக்காட்டி, பிணை விண்ணப்பம் தொடுத்த போதிலும், நீதிவான் பாதிக்கப்பட்ட மாணவியின் வயதினை சுட்டிக்காட்டி பிணை விண்ணப்பத்தை மறுத்து வருவதுடன், எதிர்வரும் தவணையில் பாதிக்கப்பட்டவர் தொடர்பில் மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்த வைத்திய அதிகாரியின் வாக்குமூலத்தை மன்றிற்கு வழங்குமாறு, கல்முனை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் குறித்த சந்தேக நபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி, சந்தேக நபரது வயது அவரது உடல்நலன் தொடர்பாக அடிக்கடி எடுத்து கூறி பிணை வழங்குமாறு கோருவது தொடர்பில், நீதிவானினால் ஆலோசனையுடன் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!