வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!!

வவுனியாவில், தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக, 970 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எமது போராட்டங்களை மழுங்கடிக்கும் நோக்குடன் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கபட்டு வருகிறது.

நாம் போரின் போது குண்டு தாக்குதல்களில் சிதைவடைந்து, உயிரிழந்த பிள்ளைகளை பற்றி கேட்கவில்லை. போர் முடிவடைந்தபின்னர் ஓமந்தை சோதனை சாவடியில் வைத்து ராணுவத்திடம் கையளிக்கபட்ட பிள்ளைகளையே கேட்கிறோம்.

புணர்வாழ்வழிப்பு என்ற பெயரில் அவர்களின் கைகளில் கொடுத்த எமது பிள்ளைகளையே நாம் கோருகின்றோம்.

ஒவ்வொருவரும் பதவிகளுக்கு வருவதற்காக திரிபுபடுத்தபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர், எமது பிள்ளைகள் இல்லை என்றால் அதனை கடந்த 2010 ஆம் ஆண்டு ‘பரணகம’ ஆணைக்குழு வவுனியாவிற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்ட போதே தெரிவித்திருக்க வேண்டும்.

எம்மிடம் ழுமையான ஆதாரங்கள் இருக்கிறது, எனவே எமது பிள்ளைகள் இல்லை என்று யாருமே செல்ல வேண்டாம்.

புணர்வாழ்வு என தெரிவித்து கையளிக்கபட்ட பிள்ளைகள் எங்கே என்று சொல்லாமல், அப்பிடி ஒரு சம்பவம் இலங்கையில் நடைபெறவில்லை என இவர்கள் எவ்வாறு தெரிவிப்பார்கள். எனவே இவர்கள்மீது சர்வதேச விசாரணை நடத்தப்படுலது அவசியம். என தெரிவித்தார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!