கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளருக்கே ஆதரவு : ஆனந்தன்!!

தமிழ் மக்களின் கோரிக்கைகள், ஜனாதிபதி வேட்பாளர்களால் நிராகரிக்கப்பட்டால், 5 தமிழ்க் கட்சிகளும் ஒன்றுகூடி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று, வவுனியாவில் உள்ள அலுவலகத்தில் தனது செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…

கடந்த காலங்களில் தமிழ் தலைமைகள் மோசமான முடிவுகளை எடுத்ததன் விளைவே தமிழ் மக்களின் தற்போதைய நிலைமைக்கு காரணம்.

கூட்டு கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டு, பிரதான ஜனாதிபதி வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்த்துக் கொள்ளப்படும் பட்சத்தில் தமிழ் மக்கள், குறித்த வேட்பாளருக்கு வாக்களிக்க கோரப்படுவார்கள்.

ஜனாதிபதி தேர்தலுக்கான கூட்டாகவே தமிழ் கட்சிகளின் கூட்டை பார்க்க முடியும், எதிர்காலத்தில் ஒன்றுபட்டு செயற்படகூடிய வாய்ப்புக்களும் இருக்கிறது.பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சிகள் மக்களை வழிநடத்த வேண்டும். தொடர்ந்தும் மௌனம் சாதிக்க முடியாது. என தெரிவித்தார்(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!