கல்விக் கண்காட்சியும், தொழிற்சந்தையும்!!

இலங்கை சமுத்திர பல்கலைக்கழக பிராந்திய நிலையம், இளைஞர் சேவைகள் மன்றம், ஜேர்மன் தொழிற் பயிற்சி நிறுவனம் மற்றும் ஏனைய அரச உயர்கல்வி நிறுவனங்கள் போன்ற அரச தொழிற்பயிற்சி நிறுவனங்கள் இணைந்து கண்காட்சி ஒன்றையும், தொழிற்சந்தையையும் ஏற்பாடு செய்துள்ளது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலையை விட்டு விலகிய இளைஞர், யுவதிகளுக்காக தொழிநுட்பவியல் கல்லூரி, பல்கலைக்கழக கல்லூரி, தொழில்பயிற்சி அதிகார சபை, தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி  அதிகார சபை, இலங்கை சமுத்திர பல்கலைக்கழக பிராந்திய நிலையம், இளைஞர் சேவைகள் மன்றம், ஜேர்மன் தொழிற் பயிற்சி நிறுவனம், ஏனைய அரச உயர்கல்வி நிறுவனங்கள் போன்ற அரச தொழிற்பயிற்சி நிறுவனங்கள் இணைந்து கண்காட்சியையும், தொழிற்சந்தையையும் ஒக்டோபர் 18,19ஆம் திகதிகளில் நடாத்த தீர்மானித்துள்ளனர்.

இத்தொழிநுட்பவியல் கல்லூரிகளில் சுமார் 55 மேற்பட்ட கற்கை நெறிகள் போதிக்கப்படுவதுடன், மாணவ, மாணவிகள் 8ம் தரச் சித்தியுடன் மேற்கொள்ளக்கூடிய கற்கை நெறிகளும் இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் முழுநேர கற்கைநெறிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு நாளொன்றுக்கு 50 ரூபா வீதம் இக்கல்லூரிகளால் வழங்கப்படுகின்றது.

தற்போதுள்ள கல்விநிலைகளைக் கவனிக்கின்ற போது சாதாரணதரம், உயர்தரம் கல்வி கற்காத எவரும் சிற்றூ ழியராகக் கூட அரச மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பை பெற முடியாதுள்ளது.

உயர்தரத்தில் பரீட்சை எழுதும் மாணவர்களில் சுமார் 10-15வீத மாணவர்களே பல்கலைக்கழக அனுமதியினைப் பெறுகின்றார்கள்.

உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தும் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிக்குள் உள்ளடங்காத மாணவர்களின் கல்வியின் தொடர்ச்சிக்காக உருவாக்கப்பட்டதே இம் மூன்றாம் நிலைக்கல்வி நிறுவனங்கள். இங்கு குறுகிய காலத்தில் நிறைவு செய்யக்கூடிய எத்தனையோ பாடநெறிகள் இருப்பதுடன், பாடநெறிகளின் நிறைவில் அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றது.

இக்கல்லூரிகளில் கல்வி கற்பவர்களுக்கு அரச மற்றும் தனியார் துறையில் வேலைவாய்ப்புக்கள் அதிகமாக கிடைப்பதுடன்,  சான்றிதழ் பெறுவதன் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களும் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளது.

இந்த நாட்டில் அரசாங்கம் இலவச கல்வியை அறிமுகப்படுத்தி ஆரம்ப கல்வி, உயர்தரக் கல்வி, தொழிநுட்பக்கல்வி, பல்கலைக்கழக கல்வி போன்ற இலவச கல்வி முறைமைகளை வழங்கி வருகிறது.

இதை தகுந்த முறையில் பயன்படுத்தி எம்மை நாமே வளப்படுத்திக் கொள்ளவேண்டும். எந்தவொரு மாணவ, மாணவியும் பாடசாலைக்கு செல்லாதிருப்பது அல்லது இடையில் பாடசாலைக் கல்வியைக் குழப்புவது அல்லது உயர்கல்வியை தொடராமல் இருப்பது தங்கள் எதிர்காலத்யையும் வாழ்க்கையையும் பாழாக்கும் செயற்பாடாகும்.

எனவே கல்வி கற்கின்ற வயதுநிலையில் இருப்பவர்கள் தங்கள் காலத்தையும், நேரத்தையும் விரையம் செய்யாது இந்த கண்காட்சியில் பங்குபற்றி ஏதாவதொரு கல்விமுறைமையை தெரிவுசெய்து தங்கள் வாழ்வை வளம்படுத்தி கொள்வதுடன், ஆற்றல் மிக்கவர்களாகவும், நட்பிரஜகளாகவும் மாறவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். என குறிப்பிட்டார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!