மட்டு, மகாஜன கல்லூரியின்  ஆசிரியர் தின   நிகழ்வு!! 

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட   மட்டக்களப்பு மகாஜன கல்லூரி ஆசிரியர் தின   நிகழ்வுகள்   பாடசாலை  அபிவிருத்தி குழு உறுப்பினர்களின் ஏற்பாட்டில், கல்லூரி மாணவர்களின் ஒழுங்கமைப்பில் அதிபர் . எ .அருமைராஜா  தலைமையில்    கல்லூரி பிரதான  மண்டபத்தில்    நடைபெற்றது .

ஆரம்ப  நிகழ்வாக மாணவர்களினால்  அதிதிகளையும், ஆசிரியர்களையும்  வரவேற்கும்  நிகழ்வு  நடைபெற்றது .

அதனை  தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன்  ஆசிரியர் கீதம் இசைக்கப்பட்டு ஆசிரியர்  தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஆசிரியர்களின் கலை நிகழ்வுகளும், ஆசிரியர்களுக்கான  கௌரவிப்பு  நிகழ்வும் நடைபெற்றது  .

சமூகத்திற்கும்  நாட்டுக்கும்  நற்பிரஜைகளை உருவாக்குவதில் வழிகாட்டியாக இருக்கின்ற  ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில்  கல்லூரி மாணவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றன.

இந்நிகழ்வில்  மண்முனை மேற்கு முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளரும், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளருமான டி .சோமசுந்தரம் , பாடசாலை  ஆசிரியர்கள், மாணவர்கள்,  பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , பாடசாலை பழைய மாணவர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர் .

 

 

 

Recommended For You

About the Author: லியோன்

error: Content is protected !!