நாட்டில், கிராமங்களை முன்னேற்ற நடவடிக்கை – நாமல்!!

வடக்கின் வசந்தத்தின் ஊடாக வடக்கின் கிராமங்களை அபிவிருத்தி செய்தோம் என பாராளுமன்ற உறுப்பினர்
நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில், ஸ்ரீலஙகா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவிற்கு ஆதரவாக இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

‘உங்களுடைய பிரச்சினைகளை நாங்கள் அறிந்துள்ளோம், உங்களுக்கு ஞாபகம் இருக்கும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டதின் ஊடாக கிராமங்களில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். நாங்கள் அமைக்கவுள்ள அரசாங்கத்தின் கீழ், உங்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய நடவடிக்கை இப்பொழுதே ஆரம்பித்துள்ளோம்.உங்களுடைய பொருளாதாரத்தை முன்னேற்றமடைய வைக்க வேண்டும்.

உங்களுடைய பிள்ளைகளின் கல்வியை முன்னேற்றமடைய செய்யவேண்டும். வேலையில்லாத இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் தீர்க்கப்படவேண்டும்.அத்தோடு மீன்பிடித் தொழிலுடன் விவசாயத்தையும் முன்னேற்றமடைய வைக்க வேண்டும்.

பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான விசேட திட்டம் ஒன்றினையும் நாம் வைத்துள்ளோம், பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளை முன்னேற்றமடைய நடவடிக்கை எடுக்கின்றோம்.

இவ்வாறு ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நாங்கள் புதிய அரசாங்கத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

எனவே நீங்கள் அனைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்கு வாக்களிக்க கரம்கோர்க்க வேண்டும்’ என நாமல் ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!