சுதந்திரமான நாட்டை உருவாக்கியது தற்போதைய அரசாங்கம்-அகில விராஜ்

தற்போதைய அரசாங்கம் செய்த சேவையில் சிறந்த சேவை சுதந்திரமான நாட்டை உருவாக்கியதே என அமைச்சர் கல்வி அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாரம்மல வாரச்சந்தையில் நேற்று நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசார மக்கள் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

மேலும் தற்போதயா அரசாங்கத்தில் வௌ்ளை வேன் இல்லை. நாம் தனிமனித சுதந்திரம் கொண்டு வந்தவர்கள் நாங்களே கடந்த காலம் அரசாங்கத்தில் அரசியல்வாதிகள் பொலிஸ் நிலையங்களில் பணியாற்றியதுபோல நாங்கள் சுதந்திரமா சேவை செய்தவர்கள் 2010 தேர்தலின் போது எங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர் என தெரிவித்தார்

நாங்கள் ஒரு நியாயமான சமுகத்தை உருவாக்கிவுள்ளோம்,எங்களைப் போல அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்திய எந்த அரசாங்கமும் இல்லை என மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!