முல்லைத்தீவில் விபத்து:ஒருவர் காயம்   

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதியின் கொக்காவில் பகுதியில் இராணுவத்தினரின் வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒரே திசையில் பயணித்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீது இராணுவத்தினரின் வாகனம் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தெரியப்படுத்தியும் குறிப்பிட்ட நேரத்திற்குள் சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகை தரவில்லை என மக்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.

மோட்டார் சைக்கிளை முந்தியவாறு சமிக்ஞையை ஒளிரவிடாது இராணுவ முகாமிற்குள் வாகனத்தை செலுத்த முற்பட்டபோதே விபத்து இடம்பெற்றதாக சம்பவத்தை நேரில் அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!