தபால் மூல வாக்காளர்களுக்கான அறிவிப்பு   

ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்தற்கான வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் திட்டப் பணிப்பாளர் சன்ன பி.டி.சில்வா தெரிவித்துள்ளார்.

தபால் மூலம் வாக்களிப்பதற்காக 7 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்தவர்கள் தமது வாக்குகளை இம் மாதம் 31ஆம் திகதியும், நவம்பர் மாதம் 1 ஆம் திகதியும் வாக்களிக்க முடியும்.

குறிப்பிட்ட இரண்டு தினங்களில் வாக்களிக்க முடியாதோர் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி அருகில் உள்ள தேர்தல் தெரிவு அத்தாட்சி அலுவலகத்தில் வாக்களிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் ஆணைக்குழுவை சேர்ந்த ஊழியர்கள் 4ஆம் திகதி தபால் மூலம் வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் திட்டப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!