முன்னாள் ஜாம்பவான்கள் பங்குகொள்ளும் ரி 20 கிரிக்கெட் போட்டி

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பெப்ரவரி 2ம் திகதி முதல் 16-திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது .

இந்தியா,ஆஸ்திரேலியா, இலங்கை,தென்ஆப்பிரிக்கா,வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பெப்ரவரி 2திகதி முதல் 16திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

சாலை விழிப்புணர்வை வலியுறுத்தி ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தொடரின் முதலாவது சீசனில் ஜாம்பவான்கள் சச்சின் தெண்டுல்கர், ஷேவாக் (இந்தியா), பிரையன் லாரா, சந்தர்பால் (வெஸ்ட் இண்டீஸ்), பிரெட்லீ (ஆஸ்திரேலியா), ஜான்டி ரோட்ஸ் (தென்ஆப்பிரிக்கா), முரளிதரன், தில்ஷன் (இலங்கை) உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். மொத்தம் 110 முன்னாள் வீரர்கள் இதில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த போட்டியின் மூலம் கிடைக்கும் வருமானம் , பாதுகாப்பு பிரிவுக்கு வழங்கப்படும். சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர்’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த போட்டிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!