தேசிய மட்ட பழுதூக்கல் போட்டி:முல்லை மாணவி ரிஷபா சாதனை   

முல்லைத்தீவு தண்டுவான் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவி செல்வரதன் ரிஷபா, 17வயதுடையவர்களுக்கான பளுதூக்கல் போட்டியில் தேசிய நிலையில் முதலிடம்பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.

ஒட்டுச்சுட்டான் பழம்பாசி கிராமத்தில், வறுமைக்கோட்டிற்கு கீழ் வசித்துவரும் செல்வரதன் ரிஷபா,முல்லைத்தீவு தண்டுவான் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்றுவருகின்றார்.

இந்நிலையில், 17வயதுப் பெண்கள் பிரிவில், 59 கிலோ எடைப்பிரிவில் நடாத்தப்பட்ட பளுதூக்கல் போட்டியில் பங்கெடுத்து 77 கிலோ எடையினை தூக்கி முதலிடம் பெற்றுக்கொண்டுள்ளார்.

துணுக்காய் கல்வி வலயத்திற்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த குறித்த மாணவிக்கு பாடசாலை சமூகம் நேற்று கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!