நாட்டின் பெரும்பாலான மாலையில் மழை பெய்யும் சாத்தியம்:வானிலை அவதான நிலையம்     

நாட்டை சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு மேலும் அதிகரிக்கும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 10 தொடக்கம் 30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் குறித்த கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்று அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!