பௌத்த மறுமலர்ச்சி நிதியத்தின் கீழ் 36 விகாரைகளுக்கு நிதி உதவி!

ஜனாதிபதியின் வழிகாட்டலில் ஜனாதிபதி அலுவலகம் முன்னெடுக்கும் பௌத்த மறுமலர்ச்சி நிதியத்தின் கீழ் 36 விகாரைகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

தூர பிரதேசங்களில் உள்ள குறைந்த வசதிகளைக்கொண்ட விகாரைகளின் அபிவிருத்தி பணிகளுக்காக இந்த நிதி உதவி வழங்கிவைக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்நிகழ்வில், தெரிவுசெய்யப்பட்ட விகாரைகளின் விகாராதிபதிகளுக்கு நிதி உதவிக்கான காசோலைகளை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைய 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பௌத்த மறுமலர்ச்சி நிதியத்தினூடாக குறைந்த வசதிகளைக்கொண்ட பெருமளவிலான விகாரைகளில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதற்காக சுமார் 600 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரின் பொறியியல் ஒத்துழைப்பையும் மனித வள பங்களிப்பையும் பெற்று இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைவாக பல விகாரைகளில் அபிவிருத்தி பணிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, காணிப் பிரச்சினைகள் காணப்படும் விகாரைகளுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குவதனூடாக குறித்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!