முன்பள்ளி ஆசிரியர் தின விழா!

யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம் நடாத்திய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தின விழா நேற்றைய தினம் நடைபெற்றது.

யாழ் நகரிலுள்ள தியாகி அறக்கொடை மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்நிகழ்வில் வருந்தினர்கள், முன்பள்ளி மாணவர்களால் மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் வாத்தியங்களுடன் மேடைக்கு அழைத்துவரப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து முன்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களால் மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அன்பளிப்புப் பொருட்களையும் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக யாழ்ப்பாண வலயக் கல்விப் பிரதிநிதிகள், கல்விப் பணிப்பாளர் ரீ.பால்ராஜ், முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் சி.கணேசலிங்கம், வர்த்தகர் ஈ.எஸ்.பீ.நாகரட்ணம், முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என பலர் கலந்துகொண்டனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!