யாழில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு!

யாழ்ப்பாணம் தந்தை செல்வா தொடக்க நிலைப்பள்ளியில் பாடசாலை அதிபர் தம்பிஐயா வாமதேவன் தலைமையில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற்கல்லூரி முகிழ்நிலை ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பில் டெங்கு ஒழிப்ப தொடர்பான விழிப்புணர்வு நேற்று இடம்பெற்றது.

தந்தை செல்வா தொடக்க நிலைப் பள்ளியில் இருந்து தெல்லிப்பளை பிரதேச செயலகம் வரை டெங்கு தொடர்பான விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது.

‘நாங்கள் வளமாக வாழவேண்டும்’ ‘நாங்கள் வாழப்பிறந்தவர்கள், என்ற தொனிப்பொருளை மையப்படுத்தி பேரணி இடம்பெற்றது.

பேரணியின் முடிவில் வலி வடக்கு பிரதேச செயலாளர் கே.சிவஸ்ரீயிடம் மாணவத் தலைவி அ.தீபிகாவால் மகஜர் கையளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களின் பெற்றோர் பாடசாலைக்குள் சிரமதான பணிகளில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் சு.சுந்தரசிவம், தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சின்னராசா சிவதாசன், யாழ்ப்பாணம் தேசியற் கல்வியற்கல்லூரியின் விரிவுரையாளர் ஆ.இரவீந்திரன். தெல்லிப்பளை பொது சுகாதார பரிசோதகர் மரியதால் ராஜமேனகன், மற்றும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், சுகாதார ஊழியர்கள், கலந்து கொண்டனர்.(நி)   

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!