மன்னாரில் கடும் மழை:தாழ் நிலப்பகுதிகள் நீரில் மூழ்கின!

மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக பெய்துவரும் கன மழை காரணமாக சில கிராமங்கள் மற்றும் தாழ் நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வரும் நிலையில் நேற்று பிற்பகல் கடும் மழை பெய்தது.

இதனால் மன்னார் தீவு பகுதியில் உள்ள குளங்கள், கால்வாய்கள் மற்றும் நீரோடைகளில்; மழை நீர் நிறைந்து காணப்பட்டதால், மேலதிக நீர் அனைத்தும் மக்கள் வசிக்கும் தாழ் நிலப்பகுதிகளுக்கு சென்றதால் சில கிராமங்கள் நீரில் மூழ்கின.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சாந்திபுரம், ஜீவபுரம், ஜிம்றோன் நகர், எமில் நகர், உட்பட பல்வேறு கிராமங்கள் நீரில் மூழ்கின.

தொடர்சியாக மழை பெய்து வருவதால் நானாட்டான், மாந்தை மேற்கு, முசலி மற்றும் மடு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வயல் நிலங்கள் மற்றும் தோட்டச் செய்கை மேற்கொள்ளப்படும் நிலங்களில் மழை நீர் நிறைந்து காணப்படுகின்றது.

இதேவேளை, மழை நீடித்தால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சில கிராமங்களை சேர்ந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!